ஒரு புறம் பேச்சுவார்த்தை, மறுபுறம் போர் பயிற்சி : மத்தியக் கிழக்கில் பரபரப்பு!
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுடன் இன்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜலசந்தியில் “சாத்தியமான பாதுகாப்பு மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு” காவலர்களைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த போர் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் கப்பல்கள் ஈரானின் ஜலசந்தியை கடந்து பயணிக்கின்ற நிலையில், இந்த போர் பயிற்சி பற்றிய அறிவிப்புகள் வந்துள்ளன.
ஒருபக்கம் அமெரிக்கா போார் கப்பல்களை அனுப்பவதாக மிரட்டல் விடுத்துள்ளது. மறுபுறம் ஈரான் குறித்த கடற்பகுதியில் போர் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இந்த சிக்கலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இடம்பெறும் இன்றைய பேச்சுவார்த்தையை உலக நாடுகள் உண்ணிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





