நிலவில் காத்திருந்த அதிசயம் : சிலிர்க்க வைத்த நாசா!
நிலவின் மர்மங்கள் நிறைந்த ‘ஓரியண்டேல் பள்ளத்தாக்கை’ (Orientale Basin) மனிதர்கள் முதன்முறையாக நேரடியாக கண்ணுற்று புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
நாசாவின் ஆர்டெமிஸ் 2 (Artemis II) திட்டத்தின் கீழ் பயணிக்கும் விண்வெளி வீரர்களே இந்த அபூர்வ வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விண்கல் மோதியதனால் உருவான ஓரியண்டேல் பள்ளத்தாக்கு, நிலவின் இளமையான மற்றும் மிகப்பெரிய பள்ளத்தாக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த பள்ளத்தாக்கு, நிலவின் மேற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்துள்ளது.
ஆர்டெமிஸ் 2 குழுவினர் விண்வெளியிலிருந்து எடுத்த நிலவின் ஓரியண்டேல் பள்ளத்தாக்கு மற்றும் பூமியின் கண்கவர் படங்களை நாசா உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.





