லெபனானில் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு: தலைதூக்கும் மனிதாபிமான நெருக்கடி!
லெபனானில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் ஏற்பட்டுள்ள கடுமையான மனிதாபிமான நெருக்கடி குறித்து உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் என உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளுக்குரிய நிதிய ஐக்கிய நாடுகள் சபை தற்போது வழங்கி வருகிறது.
எனினும், இந்த உயிர் காக்கும் பணிகளைத் தொடர பாதுகாப்பான வழித்தடங்கள் மற்றும் தடையற்ற அணுகல் அவசியம் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.





