இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க நடவடிக்கை!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 60 ரூபாவால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)