இலங்கை செய்தி

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்தவர் மடக்கி பிடிப்பு: யாழில் பரபரப்பு!

யாழ். சுன்னாகம் நகர் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்ட இராணுவச் சிப்பாயென சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சுன்னாகம் நகர்ப் பகுதியில் பெண் ஒருவர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென அப்பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார்.

இதன்போது, அப்பெண்ணின் சத்தத்தைக் கேட்டு திரண்ட பொதுமக்கள், கொள்ளையனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்ட நபரைச் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் இராணுவச் சிப்பாய் என்பது கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!