பாலித தெவரப்பெருமவிற்கு மகிந்த உள்ளிட்டவர்கள் அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கட்சி மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகள் மத்துகமையில் உள்ள அவரது இல்லத்திற்கு நாள் முழுவதும் வருகை தந்தனர்.
பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று காலை வருகை தந்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் பாலித தெவரப்பெருமவின் இல்லத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா, பாலித தெவரப்பெருமவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தார்.
மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன.





