யாழ். வலி.வடக்கில் ஏப்ரலில் காணி விடுவிப்பு!
“ யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு தொகுதி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளன.”
இவ்வாறு கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekar தெரிவித்தார்.
மக்களுடைய காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசு உறுதியான நிலைப் பாட்டில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
“ பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகள் படையினரின் வசமிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
எனினும், யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், மக்களின் காணிகள் இன்னும் விடுவிக் கப்படாமல் இருப்பது குறித்து அரசு விசேட அக்கறை கொண்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல் வலிகாமம் வடக்கில் படையினர் வசமுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளைப் படிப்படியாக உரியவர் களிடம் கையளிக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சு இதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின் றது.
ஏப்ரல் மாதத்தில் முதற்கட்ட விடுவிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் வலிகாமம் வடக்கின் சில குறிப்பிட்ட பகுதிகளை மக்களிடம் மீண்டும் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத் தப்பட்டுள்ளன.
மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி, அவர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்துவதே எமது அரசின் இலக்காகும்.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.




