பாலஸ்தீனர்களின் பகுதியில் இஸ்ரேலிய குடியேறிகள் அட்டகாசம் : பலர் படுகாயம்!
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலிய குடியேறிகள் சொத்துகளை அழித்து சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்தில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
வடமேற்குக் கரையில் நப்லஸுக்கு (Nablus) தெற்கே உள்ள ஒரு கிராமமான தல்ஃபிட் (Talfit) அருகே குறித்த தாக்குதல் நேற்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியேறிகளின் தாக்குதலைத் தடுக்க முயன்ற குடியிருப்பாளர்கள் மீது இஸ்ரேலிய துருப்புகள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்துடைப்பான அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற சூழ்நிலையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேறிகளால் இவ்வாறான தாக்குதல்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





