இஸ்ரேலின் தவறான குறிவைப்பு: அரசியல் தலைவர் பலி!
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் எனக் கருதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அரசியல் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பெய்ரூட் அருகே உள்ள குடியிருப்பொன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லாவை கடுமையாக எதிர்க்கும் The Lebanese Forces Party
கட்சியைச் சேர்ந்த பியர் முவாத் Pierre Mouawad என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
அவரது மனைவியும் இத்தாக்குதலில் பலியாகியுள்ளார்.
குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், தங்களது இலக்கு தவறிவிட்டதையும் ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.





