உலகம் செய்தி

இஸ்ரேல் – லெபனான் தாக்குதல்கள் – முடிவில்லா போரும் பேரழிவு எச்சரிக்கையும்

அண்மையில் இஸ்ரேல் லெபனான் மீது மேற்கொண்ட தாக்குதல்கள், பல காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு வருகிறன.

நெதன்யாகு, ஆட்சி மாற்றம் போன்ற முக்கிய இலக்குகளை அடைவதில் தோல்வியடைந்ததால், ஈரானுடனான போரினைத் தொடர விரும்புகிறார் என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதி, லெபனானைச் தாக்குவதன் மூலம் பலவீனமான ஒப்பந்தத்தை குலைக்க முயற்சிப்பதாக கருதப்படுகிறது. நெதன்யாகுவின் முக்கிய இலக்கு, ஹிஸ்புல்லாவிடமிருந்து வரும் அச்சுறுத்தலை அகற்றுவதாகும்.
குறிப்பாக, வடக்கு இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்களின் மூலம் சமூகங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைப்பதாகும்.

இதற்காக இஸ்ரேல், லிட்டானி நதிக்குக் தெற்கே ஒரு “பாதுகாப்பு இடைமண்டலத்தை” உருவாக்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இதனால், 1982 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்ததைப் போன்று, தெற்கு லெபனான் மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இஸ்ரேலிய படைகள் அப்பகுதியிலுள்ள வீடுகள், கிராமங்கள் ஆகியவற்றையும் அழித்துக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் ஹிஸ்புல்லா அகற்றப்படும்வரை அவர்கள் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த சூழலில், இஸ்ரேல் தனது இலக்கை முழுமையாக இராணுவ வழியாக அடைய முடியுமா என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. இது முடிவில்லாத போருக்கும், அதனால் ஏற்படும் பேரழிவுகளுக்கும் வழிவகுக்கலாம்.

ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில், லெபனானின் பங்கு விரைவில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதேவேளை, தற்போது லெபனான் பிரதமர் நவாஃப் சலாம், தனது நாட்டுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தானின் ஆதரவை கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் வெளிப்படுத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப், இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டித்து, லெபனானையும் அதன் மக்களையும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு வலியுறுத்தினார்.

இதையடுத்து, பாகிஸ்தான் லெபனானின் நிலையை ஆதரிக்கவும், சர்வதேச அமைதியை மேம்படுத்தவும் முயற்சி செய்கிறது.

பாகிஸ்தான், முன்னர் அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்திலும் மத்தியஸ்தராகச் செயல்பட்டது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!