தெஹ்ரான், பெய்ரூட்டில் தாக்குதல் தீவிரம் – மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் நகரங்களை இலக்காகக் கொண்டு புதிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்ட தகவலின்படி, தெஹ்ரான் மீது மேலும் ஒரு கட்டத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில், மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ட்ரோன்களை இலக்கு வைத்து 70-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்பாக, தெற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க F-15 ரக போர் விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் சில பகுதிகளிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக IDF தனித் தகவலில் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானிலிருந்து பலமுறை ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிகளை நோக்கி ஏவப்பட்டதாகவும், அவை கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் தாக்குதல்கள் மற்றும் எதிர்தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மேலும் பதற்றமடைந்து வருகிறது.




