உலகம்

காசாவில் வான்வழித் தாக்குதலை நடத்திய இஸ்ரேல் – 09 பேர் பலி!

காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 09 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறி செயற்பட்டமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசித்து வந்த கூடாரத்தை நோக்கி இந்த வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் தெற்கில் உள்ள கான் யூனிஸில் மற்றொரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் 05 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாத போர்நிறுத்தத்தில் இருந்து பாலஸ்தீன போராளிக் குழு  இதுவரை 06 முறை விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் மத்தியஸ்தீன் கீழ் அமுற்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் பல முறை மீறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!