உலகம் செய்தி

இஸ்ரேலில் ஊடகங்களுக்குக் கடும் கட்டுப்பாடு: வெளிநாட்டுச் சேனல்களை முடக்க புதிய சட்டம்

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வெளிநாட்டு ஊடகங்களை முடக்கும் அதிகாரத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நீட்டித்துள்ளது.

‘அல்-ஜசீரா சட்டம்’ (Al Jazeera Law) என்று அழைக்கப்படும் இந்த விதியானது, இனி வரும் இரண்டு ஆண்டுகளுக்கு, நீதிமன்ற உத்தரவு இன்றியே எந்தவொரு வெளிநாட்டு ஊடகத்தையும் தடை செய்ய அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கிறது.

அமைதிக் காலத்திலும் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இஸ்ரேலிய ராணுவத்தினால் நடத்தப்படும் ‘ஆர்மி ரேடியோ’ (Army Radio) நிலையத்தை மூடுவதற்கும் அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2026 மார்ச் மாதத்திற்குள் இந்த வானொலி நிலையம் தனது சேவையை நிறுத்த வேண்டும் எனப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ( Israel Katz) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் கருத்துச் சுதந்திரத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிரானது என ஊடக அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!