உலகம்

ஈரானை தாக்குவது ஆபத்தா? ட்ரம்ப் கூறுவது என்ன?

ஈரான்மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பில் வெளியான தகவலொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump மறுத்துள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் General Dan Cain எச்சரித்தார் என செய்திகள் வெளியாகின.

மேற்படி தகவலையே ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில்,

‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது தவறு.

நம் அனைவரையும் போலவே ஜெனரல் கெய்ன் போரை பார்க்க விரும்பவில்லை.
எனினும், ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது எளிதில் வெல்லக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அவரது கருத்து.

ஈரானின் அணுசக்தி மேம்பாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று செயல்பட்டவர் ஜெனரல் கெய்ன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அவருக்கு ஈரானை நன்கு தெரியும். ஜெனரல் கெய்ன் ஒரு சிறந்த போராளி. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை வழிநடத்துபவர்.

அவர் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என கூறவில்லை. அவருக்கு, எப்படி வெற்றி பெறுவது என்ற ஒன்று மட்டுமே தெரியும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!