வதந்தி பரப்பும் அமெரிக்க ஊடகங்கள்: ஈரான் கடும் சீற்றம்!
தமது நாடு தொடர்பில் சில அமெரிக்க ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பிவருகின்றன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வதை தான் தவிர்ப்பதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் போலியானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானுடனான உறவை ஈரான் பெரிதும் மதிப்பதாகவும், அந்நாட்டிற்குச் செல்வதை தான் ஒருபோதும் தவிர்க்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள சட்டவிரோதப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தற்போது தங்களின் முதன்மையான நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டவே தற்போதைய சூழலில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi மேலும் கூறியுள்ளார்.





