உலகம் செய்தி

ஈரானில் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – புதிய அறிக்கை வெளியீடு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் மேற்கொண்டதிலிருந்து, ஈரானில் 3,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் சட்ட மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, 3,375 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்களும், 496 பேர் பெண்களும் அடங்குகின்றனர்.

மேலும், தெஹ்ரான், ஹோர்மோஸ்கான் மற்றும் இஸ்ஃபஹான் மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

அதில் ஒரு வயதிற்குட்பட்ட 7 குழந்தைகள், 1 முதல் 12 வயதுக்குட்பட்ட 255 குழந்தைகள் மற்றும் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட 121 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவர்களில் ஆப்கானிஸ்தான், சிரியா, துருக்கி, பாகிஸ்தான், சீனா, ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளின் பிரஜைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!