செய்தி விளையாட்டு

IPL Match 48 – 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது. ரகுவன்ஷி 44 ரன்னும், ரிங்கு சிங் 36 ரன்னும், சுனில் நரைன் 27 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டூ பிளசிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!