அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் நவம்பர் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.
நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்த கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்தனர்.
மீனவர்களை நவம்பர் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
(Visited 3 times, 1 visits today)