விளையாட்டு

அபார வெற்றியீட்டிய இந்தியா – பாகிஸ்தான் படுதோல்வி

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27 ஆவது போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால்  அபார வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணிசார்பில் இஷான் கிஷான் அதிகபட்சமாக 77 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

176 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியுற்றது.

Sainth

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!