இந்தியா செய்தி

போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்தியா

அமெரிக்கா – ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது.

இந்த நடவடிக்கை மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர பதற்றத்தைத் தணித்தல், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர அணுகுமுறை ஆகியவை இன்றியமையாதவையென்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“இந்த மோதல் ஏற்கெனவே மக்களுக்கு அளவற்ற துயரத்தை ஏற்படுத்திவிட்டது. அத்துடன், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கடல்வழிப் போக்குவரத்தும், உலகளாவிய வர்த்தக ஓட்டமும் தொடர்ந்து நிலவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரானில் தற்போதும் தங்கி இருக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது.

இது தொடர்பாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஏப்ரல் 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாகவும், அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும் ஈரானில் இன்னமும் தங்கி இருக்கும் இந்திய குடிமக்கள் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, தூதரகம் பரிந்துரைக்கும் வழித்தடங்களைப் பயன்படுத்தி, ஈரானில் இருந்து உடனடியாக வெளியேற கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தூதரகத்துடன் முன்னரே கலந்தாலோசித்து ஒருங்கிணைக்காமல், எந்தவொரு சர்வதேச தரைவழி எல்லையையும் அணுகும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. தூதரகத்தின் அவசர உதவி எண்களான +989128109115; +989128109102; +989128109109; +989932179359 ஆகிய எண்களிலோ, cons.tehran@mea.gov.in என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!