பங்களாதேஷில் அதிகரித்துள்ள நோய் தொற்று – அவசர தடுப்பூசி திட்டம் அமுலில்!
பங்களாதேஷில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவிலான தட்டம்மை நோய் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு அவசரகால தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்தின் (DGHS) தகவல்படி, இந்த ஆண்டு மார்ச் 15 முதல் ஏப்ரல் 4 வரை, தட்டம்மை என சந்தேகிக்கப்படும் நோயால் குறைந்தது 98 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை மரணங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் எளிதில் பரவக்கூடிய நோய்க்கிருமிகளில் ஒன்றான தட்டம்மையின் பரவலைத் தடுக்க, 95 சதவீத மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
இதன்படி முதற்கட்டமாக 10 இலட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





