பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஏதேனும் நுகர்வோர் சந்தையில் அநீதி அல்லது பிரச்சினைகளை எதிர்கொண்டால், அலுவலக நேரங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் தகவல்களை வழங்க முடியும் என அந்த அதிகார சபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அதிகாரிகள் தேவையான தலையீடுகளை மேற்கொள்வார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.





