செய்தி தமிழ்நாடு

திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி தான் முதல்வராவார் – பாஜக மூத்த தலைவர்

திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வராவார் என பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார் ‌.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எங்களைப் பொறுத்தவரை தேசம் முதலில், கட்சி இரண்டாவது, நாங்கள் கடைசி. அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் சென்று பணியாற்ற வேண்டும் என்று கட்சி முடிவெடுத்துள்ளது. அவர் கட்சியின் மதிப்புமிக்க சொத்து, மூத்த தலைவர். அவருக்கு மாநிலம் தழுவிய அளவில் வரவேற்பு இருக்கிறது.

ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாங்கள் அவரை ஒரு தொகுதிக்குள் அடக்க விரும்பவில்லை. நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காக கட்சி பாடுபடுகிறது. நாங்கள் அனைவரும் அதை அடையவே பாடுபடுகிறோம்.

ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கிறார். ஸ்டாலினின் மருமகனான சபரீசன் மற்றொரு முக்கிய அதிகார மையமாக இருக்கிறார்.ஸ்டாலினின் சகோதரி கனிமொழி எம்பியாக இருக்கிறார். எந்த ஒரு இளைஞரும் இதுபோன்ற குடும்ப அரசியலை விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கிவிட்டார்கள். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஒருவேளை தவறுதலாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த முதல்வராக உதயநிதி ஸ்டாலின் வருவார். உதயநிதியை முதல்வராக மக்கள் ஏற்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!