இந்தியா

மனைவியின் விரலால் விவாகரத்து கோரிய கணவன்?

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்கள் 27 வயதான சப்னா மற்றும் மணீஷ்.

இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடக்க, சந்தோசமாக தங்களது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.

பரிசுகள், பயணங்கள், காதல், சிரிப்பு இப்படி நகர்ந்த திருமண வாழ்க்கையில் அவை நீண்ட நாட்கள் தொடரவில்லை.

ஆம், மணீஷின் மனைவி சப்னாவுக்கு தூக்கத்தில் விரல் சூப்பும் பழக்கம் இருந்துள்ளது.

தொட்டில் பழக்கம் சுடு காட்டு மட்டும் என பழமொழியே உள்ளது இல்லையா?

சப்னாவுக்கு சாதாரணமாக தெரிந்த இந்த பழக்கம், மணிஷ{க்கு தலையிடியாக மாறியுள்ளது.

தூக்கத்தில் இப்படி விரல் சூப்பினாலும், அது மணிஷ{க்கு தொந்தரவாக அமைந்துள்ளது.

இதனால் இந்த பழக்கத்தை கைவிடுமாறு அவர் பல முறை மனைவிக்கு கூறியுள்ளார்.

இருந்தாலும், தன்னை அறியாமல் தூக்கத்தில் நடக்கும் விசயத்திற்கு சப்னாவால் என்ன செய்ய முடியும்? சப்னாவால் அந்த பழக்கத்தை உடனடியாகக் விட முடியவில்லை.

இந்தப் பிரச்சனை நாளடைவில் இருவருக்கும் இடையே பிரச்சினையை உருவாக்கியது.

குடும்பத்தில் உள்ளவர்கள் மத்தியில் கூட சமரசம் செய்ய முற்பட்ட போதும், மணிஷ் இந்தப் பழக்கத்தை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார்.

சப்னாவுடைய இந்த செயல் தனது கௌரவத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிப்பதாக அவர் வாதிட்டுள்ளார்.

இந்த விடயம் சமூக ஊடகங்களில் பரவ, இது என்ன பெரிய பிரச்சினையா? திருமண உறவின் அர்த்தம் தெரியாமல் இந்த காலத்து பசங்க விவாகரத்து கோருகின்றார்கள். காலம் இப்படி மோசமாகி விட்டது என்றெல்லாம் பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது.

AJ

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!