இலங்கை செய்தி

விபத்தில் கணவன் பலி: மனைவி படுகாயம்! திருமலையில் சோகம்!!

திருகோணமலை, நாமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் பலியாகியுள்ளார். மனைவி படுகாயம் அடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.

மொரவெவ பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கர வண்டி, நாமல்வத்த பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை நாமல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜீ. சுனில் ரத்ன பண்டார (50வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மனைவி கே யூ. அனுஷ்கா (46 வயது) படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியான 34 வயதான இராணுவ சிப்பாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!