ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை இன்று மிகக் கடுமையாக தாக்குவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க இராணுவம் ஈரானில் புதிய இலக்குகளை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி, முதலில் தாக்கப்படாவிட்டால் அவர்களைத் தாக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு நிலைமையில் எந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது இன்னும் தெளிவாக இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.













