ஐரோப்பா

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்க தீர்மானம்!

  • February 21, 2026
  • 0 Comments

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான விசாரணைக்காக அவர் திடீரென கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிபிசி ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் லூக் பொல்லார்ட் (Luke Pollard), ஆண்ட்ரூ  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னாராக மாறுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது மன்னர் சார்ள்ஸின்  […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தொகுதி பங்கீடு: பேச்சு நடத்த விசேட குழு அமைத்தது தி.மு.க.!

  • February 21, 2026
  • 0 Comments

தேர்தல் கூட்டணி அமைக்கும் நகர்வை வெற்றிகரமாக நகர்த்தி வரும் தி.மு.க., அடுத்தக்கட்டமாக தொகுதி பங்கீடு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த எழுவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவின் தலைமைப் பதவி டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துபை; பொதுச்செயலாளர் திருச்சி சிவா, ஆ.இராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏனைய குழு உறுப்பினர்களாவர்.

இந்தியா

செங்கோட்டை அருகே தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை!

  • February 21, 2026
  • 0 Comments

டெல்லி செங்கோட்டை அருகில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோயிலொன்றை பயங்கரவாதிகள் இலக்கு வைக்கலாம் எனவும் உளவுத்துறை தரப்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாந்தினி சௌக்கின் சில பகுதிகள் உட்பட முக்கிய கோயில்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா கண்காணிப்பில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாந்தினி சௌக்கில் உள்ள ஒரு கோயிலை […]

பொழுதுபோக்கு

வெளியானது KHxRK Glimpse! இணைந்த கமல் – ரஜினி!

  • February 21, 2026
  • 0 Comments

நடிகர்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் Glimpse வெளியாகியுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகின்றார். மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் படத்தின் Glimpse இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. https://www.youtube.com/watch?v=TROFVicWrTE

ஐரோப்பா

சாகோஸ் தீவு ஒப்பந்தம் : எதிர்க்கும் முன்னாள் பிரதமர்கள்!! ட்ரம்பிடம் விசேட கோரிக்கை!

  • February 21, 2026
  • 0 Comments

சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸுக்கு மாற்றும் இங்கிலாந்தின் திட்டத்தை கைவிட அழுத்தம் கொடுக்குமாறு  முன்னாள் பிரதமர்களான போரிஸ் ஜான்சனும் (Boris Johnson) லிஸ் ட்ரஸும் ( Liz Truss) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு வாஷிங்டனின் அதிகாரப்பூர்வ ஆதரவு இருந்தபோதிலும், குறித்த தீவு கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை ‘விட்டுக்கொடுக்க வேண்டாம்’ என்று ட்ரம்ப் சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார். ஈரானுக்கு எதிரான எந்தவொரு சாத்தியமான நடவடிக்கைக்கும் குறித்த தீவு பயன்படும் என்றும் பிரித்தானிய […]

இலங்கை செய்தி

இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, அமெரிக்கா ஆராய்வு!

  • February 21, 2026
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் Stephen T. “Web” Koehler, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்து பேச்சு நடத்தினார். இச்சந்திப்பில், பகிரப்பட்ட பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்தல், ஒத்துழைப்பை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்துதல் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்பு பிரதி […]

அரசியல் இலங்கை செய்தி

டயஸ்போராக்களின் அழுத்தத்துக்கு அடிபணிவாரா நாமல்?

  • February 21, 2026
  • 0 Comments

“டயஸ்போராக்கள் அழுத்தம் பிரயோகிக்கின்றனர் என்பதற்காக சும்மா இருந்துவிடப்போவதில்லை. கட்டாயம் லண்டன் செல்லுமாறு நாமலிடம் கூறியுள்ளோம். பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவர் முடிவை எடுப்பார்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில், நாடாளுமன்ற உறுப்பிர் நாமல் ராஜபக்ச நிகழ்த்த விருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு நேற்று பதிலளித்த தஸ்ஸ குட்டியாராச்சி கூறியவை வருமாறு, “நாமல் […]

ஐரோப்பா

27 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் – பிரித்தானிய நீதிமன்றத்தின் உத்தரவு!

  • February 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பெண் ஒருவரை 27 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 37 வயதான திசாரா வெரகல என்பரே மேற்படி தண்டனையை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திககியன்று, கார்டிஃப் நகரில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில், நிரோதா நிவுன்ஹெல்லா என்ற பெண்ணை  (குற்றவாளியின் முன்னாள் மனைவி)  திசாரா வெரகல கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2017 […]

அரசியல் இலங்கை செய்தி

போரை காட்டிக்கொடுத்தாரா மஹிந்த?

  • February 21, 2026
  • 0 Comments

“மஹிந்த ராஜபக்ச போரை காட்டிக்கொடுத்துவிட்டார் என Sarath Fonseka பொன்சேகா கூறுவது அபத்தமானது. போரை முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்சவே சிறப்பான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ராஜபக்ச குடும்பம் தொடர்பில் பொன்சேகா கடும் வைராக்கியத்துடனேயே இருக்கின்றார். மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பொன்சேகா கதைப்பதில்லை. மாறாக ராஜபக்சக்கள் பற்றியே […]

உலகம்

ஈரான் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்கா!

  • February 21, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இணக்கமின்றி நிறைவடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீத வரையறுக்கப்பட்ட தாக்குதல்களை நடத்த பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிந்துரைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியட்ட அவர், ஒரு ஒப்பந்தம் எட்டப்படுமா அல்லது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பதை உலகம் “அடுத்த, 10 நாட்களில் தெரிந்துகொள்ளும் […]

error: Content is protected !!