பாக்கிஸ்தானில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கத்தை எல்லை நிர்ணயம் செய்வதில் திங்களன்று ஏற்பட்ட இரத்தக்களரி மோதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோஹாட் மாவட்டத்தில் பெஷாவரில் இருந்து தென்மேற்கே 35 கிமீ தொலைவில் உள்ள தர்ரா ஆடம் கெக் பகுதியில் சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெல் பழங்குடியினருக்கு இடையே இந்த மோதல் நிகழ்ந்தது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெஷாவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாகத் தெரியவில்லை, […]













