இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2000 கிலோ கேரள கஞ்சாவுடன் ஆறு பேர் இந்தியாவில் கைது
இந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்கு அனுப்ப தயாராக இருந்த 2090 கிலோ கேரள கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் கீரைத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுரை புதுக்குளம் பகுதியில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக கீரைத்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்ததும், புதுக்குளத்தில் தென்னந்தோப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை அதிகாரிகள் குழு சோதனையிட்டது. அப்போது லாரியில் இருந்தவர்கள் சர்க்கரையை ஏற்றிச் சென்றதாக பொலிசாரிடம் தெரிவித்தனர். அங்கு, சர்க்கரை மூட்டைகள் போன்று தயாரிக்கப்பட்டதாக […]













