புகைப்படக் கலைஞரைத் தாக்கிய குற்றச்சாட்டில் தயாசிறி மீது பொலிசார் விசாரணை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவின் புகைப்படக் கலைஞரை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு BMICH இல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் தம்மை தாக்கியதாக முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியிருந்தார்.













