உக்ரைனில் இடம்பெற்ற விபத்தில் பிரித்தானிய முன்னாள் இராணுவ வீரர் பலி
உக்ரைனில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரித்தானிய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜூலியன் தோர்ன், அகதிகளுக்கு உதவுவதற்காகவும், இங்கிலாந்தில் இருந்து அனுப்பப்பட்ட இராணுவ உபகரணங்களைப் பயன்படுத்த உக்ரேனியப் போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கவும் ஹெக்ஸாம், நார்தம்பர்லாந்தில் இருந்து பயணம் செய்தார். 36 வயதான அவர் ஃபுசிலியர்ஸ் உடன் பணியாற்றினார் என்பதுடன் ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அவரது வருங்கால மனைவி லூயிஸ் லாத்பரி தனது திருமண மோதிரத்தை உருவாக்கிய நாளான மே 21 அன்று […]













