ராஜ்குமாரியின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல நாடக தயாரிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் பணிபுரிந்த 42 வயதான ஆர்.ராஜ்குமாரியின் மரணம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. திருட்டு குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். […]













