இலங்கை

சமூர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டம்!

  • June 25, 2023
  • 0 Comments

பொருளாதார பாதிப்பால் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் சமூர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் நேற்று (24.06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் ’58 இலட்ச குடும்பங்களில் 11 இலட்ச குடும்பங்களின் ஒருநாள் வருமானம் 900 ரூபாவாக காணப்படுவதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் சுரங்கம் இடித்து விழுந்ததில் 31 பேர் பலி!

  • June 25, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 31 தொழிலாளர்கள் பலியாகினர். அத்துடன் பல காயமுற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் 16 பேர்  போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.  விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்டுப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

உலகம்

மெக்ஸிகோவில் வெள்ளை சோள இறக்குமதிக்கு வரி விதிப்பு!

  • June 25, 2023
  • 0 Comments

மெக்ஸிகோ வெள்ளை சோள இறக்குமதிக்கு 50 வீதம் வரி விதித்துள்ளது. இதன்மூலம்  தேசிய உற்பத்தியை அதிகரிக்கவும், மரபணு மாற்றப்பட்ட சோளத்தின் இறக்குமதியைத் தடுக்கவும் முடியும் என அந்நாட்டின்  ஜனாதிபதி கூறியுள்ளார். மெக்சிகன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில்  இந்த வரிவிதிப்பானது இந்த ஆண்டின் இறுதி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மெக்ஸிகோவிற்றும், கனடா மற்றும் அமெரிக்கா இடையில் மரபணு மாற்றப்பட்ட சோளம் தொடர்பாக வர்த்தக சர்ச்சை நிழவுகின்ற நிலையில் இந்த […]

இலங்கை

தேர்தலை நடத்தாமல் ஆட்சியில் நீடிக்க மக்கள் வாக்கெடுப்பை நடத்த திட்டமிடும் ரணில்!

  • June 25, 2023
  • 0 Comments

தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்க மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் எனவும் இது முறையற்ற செயல் எனவும் சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார். நாவல பகுதியில் நேற்று  (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “பொருளாதார ரீதியில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிஇ தேர்தல் ஒன்று அவசியமில்லை என்று மக்களே குறிப்பிடும் நிலையை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. தேர்தலை நடத்தாமல் […]

ஆசியா

கஜகஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

  • June 25, 2023
  • 0 Comments

கஜகஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் இன்று (25.06) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 17.4 கி.மீ ஆழந்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

உலகம்

கனடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ : தீயணைப்பு வீரர்களை பணியில் அமர்த்துவதில் சிக்கல்!

  • June 25, 2023
  • 0 Comments

கனடாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில், தீயணைப்பு வீரர்களை பணியில் அமர்த்துவது கடினமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் ஒன்டாரியோ மாகாணமானது  காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இறுக்கமான தொழிலாளர் சந்தைகள் மற்றும் வேலையின் கடினமான தன்மை காரணமாக தீயணைப்பு வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வது கடினமாகி வருகிறது என்று மாகாண அதிகாரிகள் கூறுகின்றனர். வரம்புக்குட்பட்ட வளங்கள் கனடாவின் தீயை அணைக்கும் திறனை அச்சுறுத்தலாம் எனவும்,  காலநிலை மாற்றத்தின் விளைவாக […]

உலகம்

ஒஹியோவில் 16 மாத குழந்தையை தனியே விட்டுவிட்டு விடுமுறையை கழிக்க சென்ற தாய் : பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!

  • June 25, 2023
  • 0 Comments

ஓஹியோவில் பெண் ஒருவர் தனது 16 மாதக் குழந்தையை தனியே விட்டு சென்றது குறித்து தண்டனையை எதிர்கொண்டுள்ளார். ஒஹியோவில் 31 வயதான பெண் ஒருவர் தனது 16 மாத குழந்தையை வீட்டில் தனியே விட்டுவிட்டு விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அவர் மீண்டும் வீடு திரும்பிய போது குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குழந்தை தனியாக விடப்படமையால் கவனிப்பார் இன்றி உயிரிழந்துள்ளதை கண்டறிந்தனர். குறிப்பாக குழந்தையின் தொட்டியில், நெப்கின்கள், சிறுநீர், மலம் தேங்கிய […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : நாட்டு மக்களின் கருத்துக்களை பெற நடவடிக்கை!

  • June 25, 2023
  • 0 Comments

நியூடைமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து குறித்து நாட்டு மக்களின் கருத்துக்களை பெறுவதற்கும், அது தொடர்பான பத்திரிக்கை விளம்பரங்களை வெளியிடுவதற்கும் இரண்டு வார கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இதன்போது குறித்த கப்பல் தொடர்பில் ஆராய்ந்து தேவையான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு கடந்த வாரம் அதன் தலைவர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் முக்கிய நகரை விட்டு வெளியேறிய வாக்னர் படையினர்!

  • June 25, 2023
  • 0 Comments

வாக்னர் படையினர் ரஷ்யாவின் கான்வாய் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளதாக ரோஸ்டாவ் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். “வாக்னர் பிஎம்சி கான்வாய் ரோஸ்டோவை விட்டு வெளியேறி அதன் கள முகாம்களுக்குச் சென்றது என அப்பிராந்தியத்தின் ஆளுநர் வாசிலி கோலுபேவ் டெலிகிராமில் இட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்னர் கூலி படையினர் நேற்று அதிகாலை ரஷ்யாவின் முக்கிய நகரை கைப்பற்றின. ரஷ்யா மீது போர் தொடுப்பதாகவும், ரஷ்யாவிற்கு புதிய தலைவர் தேவை எனவும் குறிப்பிட்டனர். இதற்கிடையில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் ஜனாதிபதி  லுகாஷென்கோவின் […]

ஆசியா

தென்கொரியாவிற்கு அழைப்பு விடுத்த பிளிங்கன் : எச்சரிக்கை விடுத்த வடகொரியா!

  • June 25, 2023
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் அண்மையில் சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் குறித்து விவாதிப்பதற்காக தென்கொரியாவிற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இதற்கு தக்க பதிலடிகொடுக்கப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பியோங்யாங்கை ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு சீனா அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதற்காகவும் வடகொரியா விமர்சித்துள்ளது. இது குறித்து தகவல் அளித்துள்ள தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகம்,  பிளிங்கன் மற்றும் பார்க் சீனாவுடனான உறவுகள் குறித்து தொடர்ந்து தொடர்பு கொள்ளவும், வட கொரியாவின் ஆத்திரமூட்டல்கள் மற்றும் […]

error: Content is protected !!