யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் கைது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாழடைந்த கட்டடத்தில் மறைத்து விடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் சிவன் கோவிலில் வழிபடச் சென்றவர் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை தரித்துவிட்டுள்ளார். தலைக் கவசத்தையும் விட்டுச்சென்றுள்ளார். வழிபாடு முடித்து வீடு திரும்ப முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. […]













