இலங்கையில் ஆராய்ச்சிகள் தொடரும்!!! நாசா விஞ்ஞானிகள்
இந்த நாட்டில் செவ்வாய் கிரகத்துக்கு நிகரான பாறைகள் உள்ளதா என்பதை கண்டறிய நடத்தப்பட்ட ஆராய்ச்சி தொடரும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து தற்போது ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அதன் மூத்த விஞ்ஞானி சுனிதி கருணாதிலேகா தெரிவித்தார். நாசாவுடன் இணைந்து பல சோதனைக் குழுக்கள் தற்போது அம்பலாந்தோட்டை மற்றும் உஸ்ஸங்கொட பகுதிகளில் பாறை சோதனையில் ஈடுபட்டுள்ளன. உஸ்ஸங்கொட மலையின் பாறைகள் செவ்வாய் கிரகத்தைப் போன்றதா என்பதைக் கண்டறிவதே இவர்களின் முக்கிய நோக்கமாகும். […]













