இலங்கை

வவுனியாவில் காட்டு யானைக்கு வெடி வீசியவருக்கு நேர்ந்த விபரீதம்!

வவுனியா கள்ளிக்குளம் – சிதம்பரம் கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம்  புகுந்த காட்டு யானைக்கூட்டம் தென்னை வாழை போன்ற பயிர் நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் கையில் வெடி வெடித்து இரண்டு விரல்கள் அகற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தமது குடியிருப்பு மற்றும் பயிர் நிலங்களில் காட்டு யானையின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அதைதடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொழுதுபோக்கு

அப்படியே விஜய் ஜெராக்ஸ் போல் இருக்காரே ஷாருக்கான்… அட்லீ என்ன பண்ணி வச்சிருக்கார்?

  • July 11, 2023
  • 0 Comments

அட்லீயை என்னதான் காப்பி இயக்குனர் என்று கேலி, கிண்டல் செய்தாலும் தொடர்ந்து வெற்றி படங்கள் மட்டும் தான் கொடுத்து வருகிறார். இவருடைய முதல் படமான ராஜா ராணி படத்திற்கு அடுத்தபடியாகவே தளபதி விஜய்யின் பட வாய்ப்பு அட்லீக்கு வந்தது. இவர்களது முதல் கூட்டணியை வெற்றி பெற விஜய் இவரை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அதன் பிறகு மெர்சல், பிகில் என தொடர்ந்து இவர்களது கூட்டணியில் படம் வெளியானது. இதைத்தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ கிட்டதட்ட நான்கு […]

இந்தியா

அரசியலில் தீவிரமாக இறக்கும் நடிகர் விஜய்! நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை

மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார். சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12வது பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி வுரவித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், விஜய் மக்கள் இயக்கம் அவ்வப்போது பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் […]

இலங்கை

திருமலையில் இன்று மூன்று பாடசாலைகளில் கையளிக்கப்பட்ட பசுமை வகுப்பறைகள்

  • July 11, 2023
  • 0 Comments

திருகோணமலையில் உள்ள மூன்று பாடசாலைகளில் முன்மாதிரி பசுமை வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இத் திட்டம் வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி பங்களிப்போடு Trinco Aid நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு செயற்படுத்தபட்டது. பசுமை வகுப்பறை என்பது நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்ட கற்றல் சூழலாகும். இது சுற்றுச்சூழல், விழிப்புணர்வு ,பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு இடமாகும், மேலும் இது சுற்றுச்சூழலை மதிக்கும் வகையில் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் கற்றுக்கொள்வது என்பது குறித்து […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் 24மணிநேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள்… 2வது முறையாக வெடித்த எரிமலை

  • July 11, 2023
  • 0 Comments

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக்கின் அருகே ல் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஃபக்ரடால்ஸ்ஃப்ஜால் எரிமலை வெடித்தது. ரெய்காவிக்கில் இருந்து 20 மைல் தொலைவில் ரெய்க்ஊஏன்ஸ் தீபகற்பத்தில் மக்கள் வசிக்காத பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலை வெடித்து சிதறி, தீக்குழம்பை கக்கி வருகிறது. ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாக வெடித்த இந்த எரிமலை அந்தாட்டின் பெரிய விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள போதிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கடுத்து சுவீடனுக்கு பச்சைக்கொடி காட்டிய துருக்கி அதிபர்

  • July 11, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் நேட்டோ படையில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டதால்தான், ரஷ்யா போர் தொடுக்க முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. இருந்தாலும் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வரும் உக்ரைன், நேட்டோ படையில் இணைவதற்கான மற்ற நாடுகளின் ஆதரவுகளை கோரி வருகிறது.ந்நிலையில் கடந்த வாரம் துருக்கி சென்ற அவர், அந்நாட்டு அதிபர் எர்டோகனை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நேட்டோ படையில் இணைய எர்டோகன் ஆதரவு அளித்தார். இதற்கிடையே சுவீடன் நேட்டோவில் […]

பொழுதுபோக்கு

நான் பன்னியா.. பன்னி கடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா? ப்ளூ சட்டையை விளாசிய ஜிபி முத்து

  • July 11, 2023
  • 0 Comments

வெற்றி, ஷிவானி நாராயணன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பம்பர் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து நடித்திருந்தார். தன்னை பன்னி என ப்ளூ சட்டை மாறன் பேசியதாக ஜிபி முத்து பதிவிட்டுள்ள வீடியோ பரபரப்பை கிளப்பி உள்ளது. டிக் டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமான ஜிபி முத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஒரே வாரத்தில் அந்த வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து தொடர்ந்து […]

இலங்கை

இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மன்னார் சட்டத்தரணிகள்

  • July 11, 2023
  • 0 Comments

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(11) பணிப்பகிஷ்கரிக்கை முன்னெடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப் பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து , மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப் பை […]

தென் அமெரிக்கா

பெருவில் பரவி வரும் அரிய வகை நோய் – அவசரநிலை பிரகடனம்!

  • July 11, 2023
  • 0 Comments

பெருவில் 90 நாட்களுக்கு தேசிய சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நரம்பியல் சம்பந்தப்பட்ட Guillain-Barre என சொல்லப்படுகிற ஒரு அரியவகை நோய் பரவி வருதாக கூறப்படுகின்ற நிலையில்,  இவ்வாறு  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, குறித்த நோய் காரணமாக 165 வழக்குகள் பதிவாகியுள்ளன. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் குறித்து கடந்த ஜுன் மாதம் எச்சரிக்கை விடுத்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. Guillain-Barre சிண்ட்ரோம் என்பது ஒரு அரிய நரம்பியல் கோளாறு ஆகும், இதில் உடலின் நோயெதிர்ப்பு […]

பொழுதுபோக்கு

இந்த வயதிலும் இப்படியா? ரஜினி செய்தது தெரியுமா?

  • July 11, 2023
  • 0 Comments

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக லால் சலாம் என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், […]

error: Content is protected !!