11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2012ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார்.1 இதில் விஜய்யுடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர் மீண்டும் விஜய்யுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் படத்தின் ஒன்லைனை ஷங்கர் கூறியதாகவும், இது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல் […]













