இலங்கையின் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?
இலங்கையின் சுகாதார அமைப்பை பவீனப்படுத்துவதற்கு காரணமான தரப்பினர் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது குறித்தும் தமது கட்சி கவனம் செலுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, புற்றுநோயாளிகளுக்கு தரம் குறைந்த சத்திரசிகிச்சை […]













