இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தின் சிசிடிவி காணொளி வெளியானது…

  • July 15, 2023
  • 0 Comments

தெமோதரை நீர் வழங்கல் சபைக்கு அருகில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தானது, அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகி உள்ளது. இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 25 பேர் பயணித்த பஸ்ஸில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. #Srilanka passenger bus toppled down in Demodara ,15injured pic.twitter.com/ZGlaKC0Keb — Vajira Sumedha🐦 🇱🇰 […]

ஐரோப்பா

பிரிகோஜின் கொல்லப்பட்டிருக்கலாம் – பைடன்!

  • July 15, 2023
  • 0 Comments

வாக்னர் கூலி படையின் தலைவர் ஒருவேலைவிஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், வாக்னர் படை தலைவர் யெவ்கெனி பிரிகோஜினை அண்மையில் சந்திருந்ததாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்த நிலையில், பைடனின் இந்த கருத்து வந்துள்ளது. இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ரஷ்யாவில் பிரிகோஜினின் எதிர்காலம் என்ன என்பது நம்மில் யாருக்கும் உறுதியாகத் தெரியாது என்று நான் நினைக்கிறேன் எனக் கூறினார். இதற்கிடையே […]

ஆஸ்திரேலியா

ஆஸியில் இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் !

  • July 15, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 23 வயது இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.அத்துடன் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் கோயில்களில் எழுதி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சிட்னியின் […]

இலங்கை

போர்ட் சிட்டியில் செயற்கை கடற்கரை திறப்பு :மக்கள் பார்வையிட அனுமதி!

  • July 15, 2023
  • 0 Comments

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களும்,   வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கடற்கரைக்கு அருகில்,  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் கட்டப்பட்டுள்ளது.

இந்தியா

பைக்கின் பின்புறத்தில் சிறுத்தையை கட்டி இழுத்துச் சென்ற இளைஞர்!

  • July 15, 2023
  • 0 Comments

கர்நாடகாவில், சிறுத்தை ஒன்றை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா, ஹாசன் மாவட்டம் பாகிவாலு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்ற வேணுகோபால் தன்னுடைய பைக்கில் சிறுத்தை ஒன்றை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வேணுகோபால், தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்காது. அப்போது, புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று அவரை தாக்கியுள்ளது. பின்னர், அதிர்ச்சியடைந்த […]

பொழுதுபோக்கு

அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்லுங்க… இதுதான் SJ சூர்யாவின் உண்மை முகமா?

  • July 15, 2023
  • 0 Comments

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான எஸ்.ஜே சூர்யா பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி தொழில் கற்றுக் கொண்டு தல அஜித் அளித்த வாய்ப்பினால் இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் சூர்யா. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தும் ஒரு கெட்டிக்காரர். குறிப்பாக கடந்த சில வருடங்களாக அவருடைய நடிப்பும் வளர்ச்சியும் பலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இறைவி, ஸ்பைடர், மாநாடு, என்று இவர் நடிப்புத்திறமையை மெச்சும் திரைப்படங்கள் பல உண்டு. இந்நிலையில் அண்மையில் இவர் […]

ஐரோப்பா

சுவிஸில் திரையில் ஆபாச வீடியோவுடன் சாலைகளில் வலம் வந்த வாகனம்!

  • July 15, 2023
  • 0 Comments

சுவிஸ் சாலைகளில் ஆபாச வீடியோவை ஓடவிட்டபடி வலம் வந்த வாகனம் ஒன்று சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஜெனீவாவில், வாகனம் ஒன்றின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்ட திரைகளில் ஆபாச வீடியோ ஓடியதால், பொலிஸார் அந்த வாகனத்தைக் கைப்பற்றினார்கள். விசாரணையில், அது பாலியல் நிறுவனம் ஒன்றிற்கான விளம்பரம் என தெரியவந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். அவர் அந்த விளம்பரத்தை கலையம்சத்துடன் பார்க்கவேண்டும் என்றும் அது ஆபாசம் அல்ல என்றும் வாதிட்டார். தங்கள் நிறுவனத்துக்காக சுவர்களில் விளம்பரம் செய்ய யாரும் அனுமதி […]

ஐரோப்பா

ஐரோப்பா முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை!

  • July 15, 2023
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் வெப்பநிலை உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக பிரபலமான சுற்றுலா தளங்களை தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  இத்தாலி,  சைப்ரஸ்,  ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் நிலவுகிறது,  சில இத்தாலிய பகுதிகளில் வெப்பநிலை சராசரியை விட 12C (53.6F)  வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சைப்ரஸை பொருத்தவரையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் வெப்பநிலை  43C (110F) ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஸ்பெயினின் […]

பொழுதுபோக்கு

TRP-யில் படுமோசம்… அதிரடியாக முடிவுக்கு வரும் விஜய் டிவி தொடர்

  • July 15, 2023
  • 0 Comments

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீப காலமாக விஜய் டிவி சீரியல் தொடர்கள் TRP டாப் 10 லிஸ்டில் இடம்பிடிக்க போராடி வருகிறது. சன் டிவி தொடர்கள் மட்டுமே டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்து வரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர், பாக்கிய லட்சுமி, சிறகடிக்க ஆசை போன்ற தொடர்கள் டாப் 10 லிஸ்டில் உள்ளது. விஜய் டிவியில் புதிய தொடர்கள் அடுத்தடுத்து […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்

  • July 15, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரு பொலிஸார் கத்திக்குத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. மிகவும் ஆபத்தான சம்பவம் ஒன்றின் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டின் வடகிழக்கில் மிகவும் ஆபத்தான சம்பவமொன்றை தொடர்ந்து ஆயுதமேந்திய பொலிஸார் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர் . இந்நிலையில் Campbelltown,பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் பொதுமக்களை அந்த பகுதியை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

error: Content is protected !!