பொழுதுபோக்கு

DD விவாகரத்திற்கு காரணம் அந்த ஒரு விஷயம் தான்…. அப்படி என்ன?

  • July 18, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்சினி. இவர் 21 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி பவர்பாண்டி,சர்வமும் தாளமயம் போன்ற சில படங்களில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். கடந்த 2014 -ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். நடிகை நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் […]

ஐரோப்பா

உணவு கிடைப்பதை அச்சுறுத்தி உலகை மிரட்ட ரஷ்யா முயற்சி! ஷெலென்ஸ்கி குற்றம்சாட்டு

கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரஷ்யாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் கிரிமியா பகுதியை இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு தம்பதிகளும் அவர்களது குழந்தையும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை கருங்கடல் வழியாக பாதுகாப்பாக கொண்டு செல்வதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து, உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட […]

பொழுதுபோக்கு

அஸ்வினுக்கு திருமணம்?? மணமகள் யாரா இருக்கும்?

  • July 18, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் அஸ்வின். பிரபு சாலமோன் இயக்கத்தில் வெளியான செம்பி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். இந்நிலையில் அஸ்வின் பிரபல தயாரிப்பாளர் மகளை விரைவில் திருமணம் செய்ய போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த பெண் யார் என்ற தகவல் வெளியாகவில்லை

விளையாட்டு

இந்தியா- பாகிஸ்தான் ஒருநாள் உலக கோப்பை போட்டி! கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக மைதானத்திற்கான விமான டிக்கெட்டுகளுக்கான விலை 350% அதிகரித்துள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டியை நேரில் காண விரும்பும் கிரிக்கெட் ரசிகர்கள் விமான டிக்கெட்டுகளுக்காக அதிகப்படியான தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 15-ம் திகதி […]

இலங்கை

அது இன்னும் பயன்பாட்டில்தான் உள்ளது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

  • July 18, 2023
  • 0 Comments

பேராதனை போதனா வைத்தியசாலையில் சமீபத்தில் 21 வயது யுவதியின் மரணத்துக்கு காரணமாக இருந்த மருந்தானது, இன்னும் வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலுள்ளதாகவும் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் குறித்த மருந்தின் 66,000 குப்பிகள் கையிருப்பிலுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறித்த மருந்தின் 145,930 குப்பிகள் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 79,260 குப்பிகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த […]

இலங்கை

கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலை இன்று (ஜூலை 18) முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்களான Prima Ceylon (Pvt.) Ltd. மற்றும் Serendib Flour Mills (Pvt.) Ltd ஆகியவை விலையை  குறைத்துள்ளன. அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.  

இந்தியா

ஜெய்ப்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

  • July 18, 2023
  • 0 Comments

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று இரவு குழந்தைகள் இருந்த இரண்டு வார்டுகளில் இருந்து புகை வந்தது. இதனைக் கவனித்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த வார்டுகளில் இருந்த 30 குழந்தைகளையும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். குழந்தைகள் இருந்த வார்டு சமீபத்தில் கட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தக் குழு […]

வட அமெரிக்கா

கட்டுக்கடங்காமல் எரியும் காட்டு தீ – சர்வதேச உதவியை நாடியுள்ள கனடா

  • July 18, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுதீயை அணைக்க ஆயுதப்படைகள் மற்றும் சர்வதேச தீயணைப்பு வீர்ர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. கனடா இந்த ஆண்டு மிகவும் மோசமான காட்டுதீ பாதிப்புக்களை சந்தித்து வருகிறது. ஆண்டு தொடங்கி தற்போது வரை 1கோடி ஹெக்டர் காட்டுப்பகுதி தீக்கிரையாகி உள்ளது. இதில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் 12 லட்சம் ஹெக்டர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மழைப்பொழிவு இல்லாமல் வறண்டுபோயுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் […]

பொழுதுபோக்கு

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஜி.வி. பதிவிட்ட சூப்பர் அப்டேட்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’ சமீபத்தில் விரிவான பல படப்பிடிப்புகள் நிறைவடைந்ததையடுத்து முழு அளவிலான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளது இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷின் 40 வது பிறந்தநாளான ஜூலை 28 ஆம் திகதி வெளியிடப்படும் படத்தின் டீசர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஜிவிபி ட்விட்டரில் “ஜூலை 28 சம்பவம் இருக்கு… கில்லர்… கில்லர்” என்று டீஸர் கிளிப்பை தெளிவாக பரிந்துரைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இலங்கை

கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற உத்தரவு

  • July 18, 2023
  • 0 Comments

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான மோதலில் காயமடைந்த இரண்டாம் வருட மாணவன் ஒருவர் திங்கட்கிழமை(17) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை மேலும் உக்கிரமடையாமல் தடுக்கும் வகையில், மேற்படி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (18) விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!