யாழ்ப்பாணம் குறித்து தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரியின் கருத்து
யாழ்ப்பாணம் என்பது சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி, இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு( 29)நேற்றைய தினம் வருகை தந்திருந்த தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார். தாவாடி அம்பலவான முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழாவுக்கு வருகை தந்து சிறு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி. இலங்கை முழுவதுமே முருகனின் கடாட்சம் தான் அமைந்துள்ளது. இப்போதுதான் ஆங்காங்கே விகாரம் கட்டுகிறார்கள். சைவ சமயமும் இங்கேதான் இருக்கிறது தெற்கில் கதிர்காமம் முதல் […]













