பொழுதுபோக்கு

சிறப்பு டீசருடன் பிக் பாஸ் சீசன் 7! விரைவில் ஆரம்பம்- போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

ஸ்டார் விஜய் சேனலின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ அதன் 7வது சீசனில் உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது இப்போது அதிகாரப்பூர்வமானது. ஒளிபரப்பாளர் புதிய சீசனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், மேலும் இணையத்தில் முதல் விளம்பரத்தையும் வெளியிட்டார், இது இப்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 8 ஆம் திகதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சீசனின் முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் தனது கைக்கடிகாரத்தில் நேரத்தைச் சரிபார்த்து, […]

இந்தியா

தங்கக்கடத்தல் வழக்கில் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது! என்ஐஏ அதிரடி

ரூ.9 கோடி தங்கக் கடத்தல் வழக்கில் 4 ஆண்டுகளாக வெளி நாட்டில் தலைமறைவாக இருந்த நபரை இண்டர்போல் உதவியுடன் இந்தியாவின் என்ஐஏ கைது செய்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர் மொஹபத் அலி. 2020-ல் சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கடத்தப்பட்ட 18.56 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றட்ட வழக்கில் இவர்தான் சூத்திரதாரி. எமெர்ஜென்சி லைட்டுகளின் பேட்டரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ9 கோடி பெறுமானமுள்ள தங்கக்கட்டிகள் பிடிபட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது, […]

இலங்கை

யாழில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது!

பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கீரிமலை, கல்வியங்காடு பரமேஸ்வரா சந்தி, பாற்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெற்ரோல் குண்டுகளை வீசி வீடுகளை சேதப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 9 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கில்கள், சம்பவத்துக்கு பயன்படுத்திய இரண்டு வாள்கள், ஒரு கை கோடாலி, ஒரு இரும்பு கம்பி, மடத்தல், அத்தோடு சம்பவத்துக்கு […]

ஆசியா

தலிபான்களால் சிரம்ப்படும் பெண்கள்- ஆஸ்திரேலியா தூதுவர் கவலை

  • August 18, 2023
  • 0 Comments

தலிபான்கள் மாறவேயில்லை என ஆஸ்திரேலியாவிற்கான ஆப்கானிஸ்தானின் தூதுவர்தெரிவித்துள்ளார். இதனை ஆப்கானிஸ்தான் தூதுவர் வஹிதுல்லா வசி செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஒருபோதும் மாறவில்லை அவர்கள் 1990 இன் மிகவும் பயங்கரமான ஆபத்தான கொள்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,தன்னிச்சையாக தடுத்துவைத்தல், பலவந்தமாக காணாமல்செய்தல் ,கூட்டு தண்டனைகள் ,சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், சித்திரவதைகள் போன்றவை தொடர்ந்தும் தலிபானின் ஆட்சியின் கீழ் வழமையான விடயங்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களிற்கு முன்னர் அதிகாரத்தை […]

இலங்கை

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்பிய தேரர்..பொலிஸில் முறைப்பாடு செய்த எம்.பி

  • August 18, 2023
  • 0 Comments

தமிழர் தரப்பால் இன்றையதினம் குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில், வழிபாட்டின் போது ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குள் அத்து மீறி நுழைந்து, வன்முறையில் ஈடுபட்ட குருந்தூர் மலை சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி என தன்னை கூறிக்கொள்ளும் கல்கமுவ சாந்தபோதி தேரருக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு […]

இலங்கை

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக பலி!

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்கலையில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுதி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசியா

விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மகனுடன் பேசிய தந்தை(வீடியோ)

  • August 18, 2023
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 1ம் திகதி பூமிக்கு திரும்பும் அல் […]

இலங்கை

தனியார் வங்கிக் கொள்ளை: உக்ரைனிய தம்பதியினர் கைது-நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனியார் வங்கியொன்றின் மூன்று கணக்குகளை ஊடுருவி சுமார் 13.7 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட உக்ரைனிய பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று (ஆக. 17) பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உக்ரைன் பெண்ணின் கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் அனுமதியின்றி வங்கிக் கணக்குகளை பிரவேசித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நீதிமன்றில் அறிவித்தது. சந்தேகநபர் பின்னர் இரண்டு […]

இலங்கை

யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமனம்

  • August 18, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்தியா

கச்சத்தீவு இலங்கை அரசிடம் இருந்து மீட்கப்படும்! மு.கா.ஸ்டாலின்

கச்சத்தீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக மீனவர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் கேம் அருகே இன்று நடைபெற்ற மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு (18) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, 5000-ல் இருந்து ₹8000-ஆக உயர்த்தப்படும் எனவும், 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. […]

error: Content is protected !!