உலகம் செய்தி

2050க்குள் உலகளவில் ஒரு பில்லியன் மக்களுக்கு கீல்வாதம் ஏற்படும் அபாயம்

  • August 22, 2023
  • 0 Comments

2050 ஆம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் மூட்டுகளை பாதிக்கும் கீல்வாதத்துடன் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, 30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் கீல்வாதத்தை அனுபவிக்கின்றனர், 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 30 வருட கீல்வாதம் தரவுகளை (1990-2020) ஆய்வு செய்த பின்னர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், 595 மில்லியன் மக்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 1990 இல் 256 மில்லியன் […]

இலங்கை

பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்றவருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று (22) பதிவாகியுள்ளது. திருகோணமலை- திருஞானசம்பந்தர் வீதியில் வசித்து வந்த கனகரத்னம் சிவக்குமார் (53வயது) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சாம்பல்தீவு கடற்கரைக்கு ஆறு பேர் கொண்ட குழு சென்றதாகவும் அதில் மூவர் குளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் இதனையடுத்து பொலிஸார் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் குறித்த நபரை […]

உலகம்

அணு மின் நிலையத்தின் நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பான்!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்க நீர் வியாழக்கிழமை கடலில் விடப்படும் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன. இதையடுத்து, ஜப்பானில் இருந்து […]

இலங்கை

Ez கேஸ் மூலம் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் கைது!

திருகோணமலை-மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை மொறவெவ பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். தொலைபேசி ஊடாக Ez கேஸ் மூலம் பணத்தை செலுத்திய பின்னர் குறித்த நபர் இளைஞர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது நான்கு ஹெரோயின் போதைப் பொருள் பக்கெட்டுகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது- […]

இலங்கை

காலியில் அவசரநிலை பிரகடனம்!

  • August 22, 2023
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மத்தியில் பரவும் தொற்று நோய் காரணமாக சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சிறைச்சாலைக்குள் அனுமதிப்பதற்கும் கைதிகளை வெளியே அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் தோல் தொற்று காரணமாக ஒன்பது கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நோயினால் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், அந்த மரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியா

முதல்வரின் காலில் விழுந்த ரஜினிகாந்த்!

  • August 22, 2023
  • 0 Comments

இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். இதன்போது உத்திரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த அவர் அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலின் விழுந்து வணங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவதுஇ வயது குறைவாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்தால் காலில் விழுவேன்’ எனக் கூறியுள்ளார். இதேவேளை அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்லர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் விபரமும் […]

உலகம்

கிரீஸ் காட்டுத்தீ!: காட்டில் பதினெட்டு உடல்கள் கண்டெடுப்பு

கடந்த நான்கு நாட்களாக காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வடக்கு கிரீஸின் வனப்பகுதியில் 18 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரேக்க தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பிரேத பரிசோதனைக் குழு மற்றும் விசாரணைக் குழு தாடியா காட்டில் சம்பவ இடத்திற்குச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கிய எல்லையில் இருந்து வெகு தொலைவில் உள்ள வடகிழக்கு கிரீஸின் எவ்ரோஸ் பகுதி தீயினால் எரிந்து நாசமானது. கடலோர நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் புலம்பெயர்ந்தவர் என்று […]

இலங்கை

திருகோணமலை கடற்படை முகாமின் ஜெட்டி உடைந்ததில் பலர் காயம்!

  • August 22, 2023
  • 0 Comments

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள ஜெட்டியின்  ஒரு பகுதி உடைந்ததில் பாடசாலை மாணவர்கள் இருவர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் முகாமுக்குள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களும் அவர்களுடன் சென்ற பெரியவர்களுமே காயமடைந்துள்ளனர்.

ஆசியா

1000 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட மாணவர்கள்- ஆசிரியர்கள்; மீட்பு பணி தீவிரம்

  • August 22, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அல்லாய் பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மற்ற மாணவ மாணவிகள் தாம்டோர் நகருக்கு செல்வதற்கு, 1000 அடி உயரம் உள்ள குல் தோக் கேபிள் காரில் பயணம் செய்கிறார்கள். இன்று காலை அந்தரத்தில் கேபிள் கார் சென்று கொண்டிருக்கும் போது கேபிள் உடைந்ததால் கேபிள் கார் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதில் பயணம் செய்த 6 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் 1000 அடி உயரத்தில் கேபிள் […]

இலங்கை

இலங்கையில் தேசிய கீதத்தை பாட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

  • August 22, 2023
  • 0 Comments

தேசிய கீதத்தைப் பாடுவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை தவறான முறையில் பாடியுள்ளாரா என ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, தேசிய கீதத்தை எவ்வாறு பாடுவது என்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் இருந்தாலும், தேசிய கீதம் நடுவில் பாடப்பட வேண்டும் […]

error: Content is protected !!