உலகம் செய்தி

பாகிஸ்தான் சர்வதேச விமானச் சேவையின் 100% பங்குகளை விற்கத் தீர்மானம்

  • December 18, 2025
  • 0 Comments

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரச விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) நூறு சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய அந்நாட்டு அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை அந்நாட்டின் தனியார்மயமாக்கல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விமான நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்த ஏலதாரர்கள் அனைவரும், கொள்வனவுக்குப் பின்னர் அரசாங்கத்தின் தலையீடு இன்றி முழுமையான முகாமைத்துவக் கட்டுப்பாட்டை கோரியுள்ளனர். இதன் காரணமாகவே, முதலில் திட்டமிட்டிருந்த பங்குகளை விட 100 சதவீத பங்குகளையும் […]

இந்தியா உலகம் செய்தி

H5N1 வைரஸ் உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

  • December 18, 2025
  • 0 Comments

பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் H5N1 வைரஸ், எதிர்காலத்தில் ஒரு பாரிய உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சுமார் 48 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள இந்த வைரஸ் குறித்து, Ashoka பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டக் கிராமங்களை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த கணினி உருவகப்படுத்துதல் ஆய்வில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஒரு பகுதியில் தொற்று எண்ணிக்கை 2 முதல் 10-க்குள் இருக்கும்போதே […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய ‘பண ஆணை’: அத்தியாவசியப் பொருட்களுக்கு ரொக்கப் பணம் கட்டாயம்

  • December 18, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் மளிகை சாமான்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு ரொக்கப் பணத்தை ஏற்றுக்கொள்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இது தொடர்பான புதிய கொள்கையை ஆஸ்திரேலியப் பொருளாளர் Jim Chalmers அறிவித்துள்ளார். இதன்படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல், பெரிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிலையங்களில் 500 டொலருக்கும் குறைவான கொள்முதல்களுக்கு வாடிக்கையாளர்கள் ரொக்கமாகப் பணம் செலுத்த முடியும். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படக் […]

இலங்கை

ரன்வல விபத்தில் கடமை தவறிய பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

  • December 18, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகன விபத்து தொடர்பான சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமையைச் செய்யத் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் விசாரணை ஒன்று நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விசாரணையில், சபுகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி […]

A Victorian vegetable farm has been sued for underpaying migrants ஆஸ்திரேலியா உலகம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊதிய மோசடி: விக்டோரியா காய்கறிப் பண்ணை மீது வழக்கு

  • December 18, 2025
  • 0 Comments

“ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணுக்கு கிழக்கே அமைந்துள்ள ‘பாமர்ஸ்’ (Bulmers) காய்கறிப் பண்ணை, 28 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுமார் 6 இலட்சத்து 45 ஆயிரம் டொலர் ஊதியத்தைக் குறைவாக வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2019 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், வேலை நேரத்தைக் கணக்கிடாமல் நிலையான வாராந்திர ஊதியத்தை வழங்கியதன் மூலம் அந்நிறுவனம் தொழிலாளர் சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் 1,500 முதல் 39,000 டொலர் வரை நிலுவைச் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள நியாயமான பணி […]

இந்தியா

“திமுக ஒரு தீய சக்தி ; தவெக ஒரு தூய சக்தி” – ஈரோட்டில் விஜய் பேச்சு

  • December 18, 2025
  • 0 Comments

திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம், தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், “நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் வைத்து தான் தொடங்குவார்கள். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு. விவசாயத்துக்கு […]

உலகம் செய்தி

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மற்றொரு தாக்குதலை நடத்திய அமெரிக்கா!

  • December 18, 2025
  • 0 Comments

அமெரிக்க இராணுவம் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நேற்று மற்றுமொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவின் கீழ் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருப் பகுதியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த கப்பலில் போதைப்பொருள் கடத்தப்பட்டமைக்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்க இராணுவம் முன்வைக்கவில்லை. இதேவேளை குறித்த கடற்பகுதியில் இதுவரை 26 தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 99 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான தாக்குதல்களை […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் – இருவர் கைது!

  • December 18, 2025
  • 0 Comments

லண்டனில் நேற்று நடத்த பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்களின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “இன்டிஃபாடா”( intifada – இஸ்ரேலுக்கு எதிரான கிளர்ச்சிகளைக் குறிக்க பாலஸ்தீனியர்களால் பயன்படுத்தப்படும் சொல்) அழைப்புகளை எழுப்பிய கோஷங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இன்டிஃபாடாவை உலகமயமாக்கு” போன்ற சர்ச்சைக்குரிய கோஷங்களைப் பயன்படுத்தும் நபர்களைக் கைது செய்துள்ளதாக அறிவித்த பெருநகர காவல்துறையினர் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி மேற்படி கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளனர். சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை […]

ஆஸ்திரேலியா உலகம்

வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த ஆஸி.யில் புதிய சட்டங்கள் – பிரதமர் கடும் எச்சரிக்கை

  • December 18, 2025
  • 0 Comments

வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த யூத கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர். புதிய சட்டங்கள் “வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதக் கருத்துகளை பரப்புபவர்களை” குறிவைக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு விசாக்களை ரத்து செய்யவோ அல்லது மறுக்கவோ உள்துறை அமைச்சருக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்படும். […]

உலகம் செய்தி

48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்த பணவீக்கம் – ட்ரம்ப் கருத்து!

  • December 18, 2025
  • 0 Comments

தான் பதவியேற்றபோது நாட்டின் பணவீக்கம் 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்திருந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போது மளிகைப் பொருட்களுக்கான விலை குறைவடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 1.45 மில்லியனுக்கும் அதிகமான இராணுவ சேவை உறுப்பினர்களுக்கு “போர்வீரர் ஈவுத்தொகையாக  $1,176 டொலர் வழங்கப்படும் எனவும்  அறிவித்துள்ளார். குறித்த பணம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சராசரி […]

error: Content is protected !!