ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை
அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் ‘உரித்து’ பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை (27) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் […]













