நாடு கடத்தப்படவுள்ளவர்களை தங்க வைப்பதற்கு இடம் தேடும் ட்ரம்ப் நிர்வாகம்!
அமெரிக்கா முழுவதும் குறைந்தது ஏழு பெரிய அளவிலான கிடங்குகளை கையகப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. குடியேற்ற முறையை ஒழுங்கமைக்கும் வகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கான தங்குமிட வசதிகளை உருவாக்க இந்த கிடங்குகளை பயன்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வொஷிங்டன் போஸ்ட்டால் (Washington Post) பெறப்பட்ட வரைவு கோரிக்கை திட்டத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை, 5,000 முதல் 10,000 பேர் வரை தங்கக்கூடிய குறைந்தது ஏழு பெரிய தொழில்துறை கிடங்குகளை […]













