உலகம்

பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா – அமெரிக்கா! 10 ஆண்டுகளுக்கான புதிய உடன்படிக்கை

  • November 1, 2025
  • 0 Comments

அடுத்த பத்தாண்டுகளில் தமக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை விஸ்தரித்துக் கொள்ளும் நோக்கத்துடன், இந்தியாவும், அமெரிக்காவும் சட்டக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Heggseth), இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை மலேசியத் தலைநகரில் இடம்பெற்றது. இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் வரி விதித்து வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் சூழ்நிலையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய செய்தி வெளியாகிறது.

உலகம் செய்தி

ஜப்பானில் கரடிகளை கொன்றொழிக்க ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்

  • November 1, 2025
  • 0 Comments

ஜப்பானில் கரடிகளை கொன்றொழிக்க வேட்டைக்காரர்களை இணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் கரடிகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் கரடிகளைக் கொன்றொழிக்க வேட்டைக்காரர்களை ஆட்சேர்ப்பு செய்வது பற்றி அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அனுமதி பெற்ற வேட்டைக்காரர்களையும், கரடிகளைக் கையாளக் கூடியவர்களையும் வாடகைக்குப் பெற நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதாக ஜப்பானின் சுற்றுச்சூழல்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாண்டு மாத்திரம் நகர்ப்புறங்களை ஊடுருவிய கரடிகள் தாக்கி ஜப்பானில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை செய்தி

புதிய எரிபொருள் விலைகளை அறிவித்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) இன்று (01) முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் ஆக்டேன் 92ன்(Petrol Octane 92) விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் புதிய விலை ரூ.294 ஆக உள்ளது. சூப்பர் டீசலின்(Super Diesel) விலை லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய சில்லறை விலை ரூ.318 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஆக்டேன் 95(Petrol Octane 95), லங்கா ஆட்டோ டீசல்(Auto Diesel) அல்லது லங்கா […]

உலகம் செய்தி

துனிசியாவில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • October 31, 2025
  • 0 Comments

ஜனாதிபதி கைஸ் சயீத்தை(Kais Saied) விமர்சித்ததற்காக அறியப்பட்ட முன்னாள் நிர்வாக நீதிபதியான அகமது சயீத்துக்கு(Ahmed Saied) துனிசிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முன்னாள் நிர்வாக நீதிபதியான அகமது சயீத், துனிஸில்(Tunis) உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். நீதித்துறையை விமர்சிக்கும் கருத்துகளுக்காகவும், நாட்டின் நீதிபதிகள் தலையில் கத்தியுடன் வேலை செய்வதாக விவரித்ததற்காகவும் ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். 2021ம் ஆண்டில் ஜானதிபதி கைஸ் சயீத் பரந்த அதிகாரங்களைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தைக் […]

உலகம் செய்தி

போதைப்பொருள் படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் – ஐ.நா மனித உரிமைகள் தலைவர் கண்டனம்

  • October 31, 2025
  • 0 Comments

தென் அமெரிக்காவிலிருந்து(South America) சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்டு சென்றதாகக் கூறப்படும் கரீபியன் கடல்(Caribbean Sea) மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில்(eastern Pacific Ocean) படகுகள் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்(UNHCR) தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் தலைவர் வோல்கர் டர்க்(Volker Turk) […]

உலகம் செய்தி

நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

  • October 31, 2025
  • 0 Comments

நைஜீரியாவில்(Nigeria) கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதால் மேற்கு ஆப்பிரிக்க நாட்டை வெளியுறவுத்துறை கண்காணிப்பு பட்டியலில் சேர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) குறிப்பிட்டுள்ளார். “நைஜீரியாவில் கிறிஸ்தவம் இருத்தலியல்(existential) அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த படுகொலைக்கு தீவிர இஸ்லாமியர்களே காரணம்” என்று டிரம்ப் தந்து ட்ரூத் சோஷியல்(Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஆப்பிரிக்காவின் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இருக்கும் நைஜீரியாவை, மத சுதந்திர மீறல்களில் […]

உலகம் செய்தி

கனடாவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • October 31, 2025
  • 0 Comments

2022ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தின் நடுவர் மன்றம், பால்ராஜ் பாஸ்ராவை(Balraj Basra) முதல் நிலை கொலை மற்றும் தீ வைப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. அக்டோபர் 17, 2022 அன்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கோல்ப்(Golf) மைதானத்தில் விஷால் வாலியா(Vishal Walia) என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளால் ஒரு வாகனம் […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் 55 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் மரணம்

  • October 31, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின் பர்வானி(Barwani) மாவட்டத்தில் ‘நர்மதா பரிக்ரம'(Narmada Parikrama) யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், 55 பேர் காயமடைந்துள்ளனர். இந்தூர்(Indore) மற்றும் தார்(Dhar) மாவட்டங்களைச் சேர்ந்த 56 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பைகூர்(Baigur ) கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் 15 பேர் சிகிச்சைக்காக பர்வானி(Barwani) மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், ஏனையோர் கெதியா(Khetia) ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து ஓட்டுநர் […]

இந்தியா செய்தி

சத்தீஸ்கரில் திறக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம்

  • October 31, 2025
  • 0 Comments

பழங்குடி சுதந்திர வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம் சத்தீஸ்கரில்(Chhattisgarh) உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில்(Nava Raipur Atal Nagar) நிறுவப்பட்டுள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய பழங்குடி வீரர்களின் வீரம் மற்றும் தியாகங்களை வெளிப்படுத்துகிறது. ஷாஹீத் வீர் நாராயண் சிங்(Shaheed Veer Narayan Singh) நினைவு மற்றும் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) திறந்து வைப்பார் என்று அதிகாரப்பூர்வ […]

ஐரோப்பா செய்தி

பிரான்சில் தங்க ஆய்வகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ஆயுதமேந்திய குழு கைது

  • October 31, 2025
  • 0 Comments

பிரான்ஸின் லியோனில்(Lyon) உள்ள தங்க சுத்திகரிப்பு ஆய்வகத்திற்குள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி இராணுவத் தர ஆயுதங்களுடன் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போர்க்வெரி(Pourquery) தங்க ஆய்வகத்திற்குள் நுழைந்த சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்து, 12 மில்லியன் யூரோக்கள் ($13.8 மில்லியன்) என மதிப்பிடப்பட்ட கொள்ளைப் பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொள்ளையின் போது ஐந்து ஊழியர்கள் காயமடைந்ததாகவும் அவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுபவம் வாய்ந்த குற்றவாளிகள் என்று […]

error: Content is protected !!