இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தீவிரம்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஆட்களை ஏமாற்றிய சம்பவம் பற்றி கூடுதலான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டும், போலிப் பிரச்சார நடவடிக்கைகள் ஊடாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. பல பிரச்சார விளம்பரங்கள் போலியானவை. இவற்றை வெளியிடுவதற்கு முன்னதாகப் பணியகத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தாலும், பெரும்பாலான விளம்பரங்களுக்கு அத்தகைய அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் […]













