தெலுங்கானாவில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
தெலுங்கானா மாநிலம் ஜோகுலாம்பா கட்வால்(Jogulamba Gadwal) மாவட்டத்தில் உள்ள அரசு சிறுவர் நல விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 52 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தர்மவரம்(Dharmavaram), இதிக்யாலா(Itikyal) மண்டலத்தில் அமைந்துள்ள விடுதி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 32 மாணவர்கள் நிலையாக உள்ளதாகவும் மீதமுள்ளவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இரவு உணவாக சாம்பார் சாதம், முட்டைக்கோஸ் கறி வழங்கப்பட்டதாகவும், பின்னர் வயிற்று வலி மற்றும் […]













