இஸ்தான்புல் பேச்சுவார்த்தையை அடுத்து போர் நிறுத்தத்தை நீட்டிக்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஒப்புதல்
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போா் நிறுத்தத்தை நீடிக்க இரு நாடுகளும் நேற்று (31) ஒப்புக்கொண்டன. மேலும், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. இது குறித்து இரு நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடத்திவைத்த துருக்கி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒக்டோபா் 15ம் திகதி அமுலுக்கு வந்த போா் நிறுத்தத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனா். அந்த போா் நிறுத்த அமுலாக்கம் குறித்து இரு நாட்டு […]













